அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(10) காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த 08ம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் அவசியம் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இந்த விவாதம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####