தலைமுடிக்கு வேகமாக ஆரோக்கியம் ஊட்ட உதவும் வகையிலான சில பொருட்கள் உள்ளன.
இதில் யோகர்ட் சுவையூட்டப்பட்ட தயிர் பொதுவான தலைமுடி நலன் சார்ந்த பொருளாகும். இதில் விட்டமின், கொழுப்பு ஆசிட் அதிகம் இருக்கும். இது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாகும்.
யோகார்ட்:
தேவையான பொருட்கள்:
ஒரு முட்டை
2 டீ ஸ்பூன் யோகர்ட்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மஞ்சள் மற்றும் வெள்ளை கரு நன்றாக கலந்தவுடன் 2 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்குங்கள். உங்கள் கூந்தல் முழவதும் இதை வேர் முதல் நுணி வரை தடவவும்.
முடி காய்ந்த அல்லது ஈரப்பதத்தில் இருக்கலாம். தலை முடியின் அனைத்து பகுதிகளிலும் இதை தடவியவுடன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் இதை ஷாம்பு மற்றும் குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் இந்த கலவயை வாரத்தில் 2 முறை செய்யலாம். முட்டையில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இது உங்களது உச்சந் தலை மற்றும் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கும்.
வாழைப்பழம் மற்றும் யோகர்ட்:
தேவையான பொருட்கள் .
அரை பழுத்த வாழைப்பழம் .
ஒரு டீ ஸ்பூன் யோகர்ட் .
2 டீ ஸ்பூன் தேன் .
1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை: நன்றாக பிசைந்த வாழைப்பழத்தோடு மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து நன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இந்த பேஸ்டை உங்களது கூந்தலில் நுணி முதல் வேர் வரை நன்றாக அனைத்து பகுதிகளிலும் இரு க்கும் வகையில் தடவ வேண்டும். இதை 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் ஷாம்ப் உதவியுடன் கழுவவும். வாரத்தில் 2 முறை இதை செய்யலாம். இந்த கலவை கூந்தலை அதிக மிருதுவாகவும், சத்துள்ளதாகவும் மாற்றும். இதில் உச்சந் தலையை சுத்தம் செய்யும் பொருட்கள் அடங்கியுள்ளது. இது உச்சந் தலையையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திரு க்க உதவும்.
யோகர்ட் மற்றும் தேன்:
தேவையான பொருட்கள்:
அரை கப் யோகர்ட் .
ஒரு டீ ஸ்பூன் தேன் .
ஒரு டீ ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர்
செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்து மென்மையான மற்றும் நிலையான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும். கூந்தலில் நுணி முதல் வேர் வரை அனைத்து பகுதிகளிலும் இந்த கலவையை தடவவும். இந்த கலவை 30 நிமிடங்கள் வரை கூந்தலில் ஊற வேண்டும். மென்மையான ஷாம்பு மூலம் கழுவவும். வாரத்தில் 2 முறை இதை செய்யலாம். இந்த கலவை உச்சந் தலையில் எண்ணெய் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும். நுண் குமிழிகள் அடைப டுவதை தடுக்கும். உங்களுக்கு காய்ந்த கூந்தல் இருந்தால் இந்த கலவையோடு ஒரு வாழைப்பழத்யும் சேர்த்து தடவலாம். அல்லது பிசுபிசுப்பான முடி இருந்தால் ஸ்ட்ராபெரியை கலந்து பயன்படுத்தலாம்.
தேங்காய் பால் மற்றும் யோகர்ட்:
தேவையான பொருட்கள்:
ஒரு கப் தேங்காய் பால்
அரை கப் யோகர்ட் .
2 டீ ஸ்பூன் கற்பூர எண்ணெய்
செய்முறை: நிலையான கலவை ஏற்படும் வரை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலக்க வேண்டும். இந்த கலவையை உங்களது உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்யவும். அதேபோல் கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் தடவ வேண்டும். ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். வாரத்தில் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தலாம். தேங்காய் பாலில் அத்தியாவசியமான கொழுப்பு ஆசிட் சக்தி உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும். இது உங்களது உச்சந் தலையில் செயலாற்றி ஊட்டச்சத்து மிக்க முடி வளர்ச்சிக்கு உதவும்.
எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட்:
தேவையான பொருட்கள்:
4 டீ ஸ்பூன் யோகர்ட் .
2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு .
ஒரு டீ ஸ்பூன் தேன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களை மென்மையாக கலக்க வேண்டும். இந்த கலவையை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவுங்கள். 15 முதல் 20 நிமிடங்கள வரை உறவைத்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தலாம். மோசமான உச்சந்தலையில் செயலாற்ற இது எளிமையான வழியாகும். இது கூடுதல் எண்ணெய் மற்றும் சரும உற்பத்தியை ஒழுங்குபடுத்தும். நுண்ணறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சியால் ஆரோக்கிய கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கூந்தர் வளர்ச்சி என்பது எளிமையான காரியம் கிடையாது. இதற்கு அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் கூந்தல் வளர்ச்சிக்கு யோகர்ட் பயன்படுத்துவது சிறந்த உதவியளிக்கும். இதற்கு முன்பு கூந்தல் பராமரிப்புக்கு நீங்கள் யோகர்ட் பயன்படுத்தியிருந்தால் உங்களது கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.