எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி இதன் போது அறிவிக்கவுள்ளார்.
மேலும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிச் சார்பற்ற ஓர் நிலைப்பாட்டை ஜனாதிபதி பின்பற்றுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைப் பதவிகளை வகிக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி தினமான இன்று, ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் அதன்போதே அவர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(riz)