நேற்று(10) இரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஆரம்பித்த திடீர் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது
இன்று(11) காலை 9.00 மணிக்கு புகையிரத பொது முகாமையாளருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடகொட புகையிரத நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னிறுத்தி இந்த திடீர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரம்புக்கனைக்கு அப்பால் மலையக புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
——————————————–(UPDATE) 8.20 A.M
நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் – மலையக புகையிரத சேவை பாதிப்பு…
புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று(10) நள்ளிரவு முதல் திடீர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்புக்கும் பதுளைக்குமான புகையிரத சேவை மற்றும் கண்டி – மாத்தளை வரையான புகையிரத சேவையும் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதம், கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதம், நாவலபிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை புகையிரத நிலையம் இன்று(11) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.