ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.
டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில் இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்தால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். லண்டனில் பிறந்த டேவிட் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார்.
எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் நாடுகளில், ஆஸ்திரேலியாவும் ஒன்று. எனவே டேவிட்டின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சுவிட்ஸர்லாந்த் சென்ற அவர், சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.