நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சாரம் அற்ற சமுர்த்திப் பயனாளிகளும் கடற்றொழிலாளர்களுக்கும், மண்ணெண்ணெய் இற்கான நிவாரணத் தொகையினை வங்கிக் கணக்கினூடாக வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெட்ரோலியம் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த நிவாரணத் திட்டம் இன்று(11) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
சமுர்த்திப் பயனாளிகளுக்கு மாதத்திற்கு மண்ணெண்ணெய் 15லீட்டருக்கான பணம் அவர்களது கணக்கில் வைப்பிலிடவும், கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் 375லீட்டருக்கான பணமும் வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
#rishma