எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களது சேவைக் கட்டணங்களும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஒல்ஸ்ரீ டி சில்வா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்புடன் எமது சேவைக் கட்டணம் குறித்தும் தீர்மானம் எட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
####