காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – 55 பேர் உயிரிழப்பு…

காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறப்பதற்கான நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்கா நேற்று தனது தூதரகத்தை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை நேற்று நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.