மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் நேற்றிரவு(14) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு, முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமையால், அந்த வண்டி, வீதியை விட்டுவிலகி, மரமொன்றில் மோதி, புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்திலிருந்து பயணித்த மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.