திடீர் சுகயீனம் காரணமாக சுசில் பிரேமஜயந்த வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நேற்றிரவு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பு மனு தொடர்பில் அக்குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பீலிக்ஸ் பெரேராவுடன் ஏற்பட்ட தீவிர மோதல் நிலையை தொடர்ந்து இவ்வாறு அவர் சுகயீனமடைந்துள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எனினும், சுசில் பிரேம ஜயந்தவின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டணியின் கொழும்பு மாவட்ட தலைவரான அவர் இன்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)