நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக உடவளவ மற்றும் கலாவௌ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென நிலையத்தின் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.