இன்று 11 மணிநேரம் நீர் விநியோகம் தடை…

இன்று(17) காலை 8 மணிமுதல் மாலை 7 மணி வரையில், 11 மணிநேரம் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக கேன்கஹஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாத்துவை, வஸ்கடுவை, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிலிமினவன்ன, பெம்புவல, பேருவளை, களுவமோதர, மொரகல்ல, அழுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தொட ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.