பேரூந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்திற்கு தயாராகிறது…

பேரூந்து கட்டணத்தை 12.5% இனால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனரின் சம்பளமும் 10% இனால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பிரதான செயலாளர் சுமித்ர குமாரதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாத விடத்து, நாடு தழுவிய ரீதியான தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.