தேசிய படைவீரர் நினைவுதினத்தை முன்னிட்டு நாளை(19) விசேட வாகன ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாளை(19) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணிவரை பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சந்திவரையில் குறித்த வாகன போக்குவரத்து ஓழுங்கு நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யப்பான் நட்புறவு பாலம் சந்தி ,பலன்துண சந்தி ,பெலவத்த சந்தி, பத்தரமுல்ல சந்தி மற்றும் கிம்முலாவல சந்தி ஆகிய சந்திகள் ஊடாக வழமைபோன்று போக்குவரத்திற்காக திறந்திருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.