மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாகின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன், குறித்த பைகள் பலவற்றில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றவற்றை கைப்பற்றியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.