எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொருட்களை எடுத்து செல்வதில் பெரும் சிரமங்களை தாம் எதிர்கொள்வதாக அனைத்து இலங்கை அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்கும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளது தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பந்துல ஜயமான்ன இது குறித்து குறிப்பிடுகையில்; அரசு இது குறித்து அவதானம் செலுத்தத் தவறின் எதிர்வரும் நாட்களில் நாம் தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.