சமீபத்தில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட சோனம் கபூர் அணிந்திருக்கும் மோதிரத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார்.
விரைவில் கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனம்கபூர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள்.
இந்த நிலையில் கூடுதல் தகவலாக சோனம் கபூர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்புதான் சோனம் கபூருக்கு திருமணம் நடந்தது. அப்போது கணவர் ஆனந்த் அஹுஜா இந்த விலை உயர்ந்த மோதிரத்தை அவரது கைவிரலில் அணிவித்தார் என்கின்றனர்.
