வைரஸ் காய்ச்சல் குறித்து ஆராய தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் குழு இன்று பயணம்…

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்களிடத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இன்று(21) குறித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி காலி, கம்புருப்பிட்டிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கே விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த வைரஸ் நோய் காரணமாக மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின் , மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த வைரஸ் காரணமாக இதுவரையும் 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.