மிஸ் அமெரிக்காவாக ஒலிம்பியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் ஒலிவியா ஜோர்டான் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் பிறந்த ஒலிவியா(26), இதற்கு முன்னர் சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று 20வது இடத்தை பிடித்த இவர், கடந்த டிசம்பர் மாதம் ‘மிஸ் ஓக்லஹாமா’ பட்டத்தை வென்றார்.

தற்போது ‘மிஸ் அமெரிக்கா’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, முடிசூட்டப்பட்டுள்ள ஒலிவியா ஜோர்டான், விரைவில் நடைபெறவுள்ள ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் அமெரிக்கா சார்பில் பங்கேற்பார் என தெரிய வந்துள்ளது.

இந்த உலக அழகிப் போட்டியை தொடர்ந்து நடத்தி வரும் டோனால்ட் டிரம்ப் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவருகிறார். அப்போது மெக்ஸிக்கோவில் இருந்து வரும் நபர்களால் அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இன்று நடைபெற்ற இந்த அழகிப் போட்டியை பல அமெரிக்க ஊடகங்கள் புறக்கணித்து விட்டன. இதே போல் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தேர்வுக் குழுவைச் சேர்ந்த சிலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)