மூன்று கோரிக்கைகள் முன்வைத்து, புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் நேற்று(23) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த போராட்டத்தினால் புகையிரத பயணத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.