டீசல் வாகனங்களை செலுத்த இம்மாத இறுதியில் இருந்து தடை…

புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு ஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் தடை விதித்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

துறைமுக நகரமான ஹம்பேர்க்கில் அதிகளவான டீசல் வாகனங்கள் வந்து செல்வதனால் நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்று மாசுப்பாடு அதிகரித்தள்ளதால், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின் யூரோ 6 புகைச் தரச் சான்று இல்லாத டீசல் வாகனம் எதனையும் ஹம்பேர்க் நகரில் இயக்கக் கூடாது என ஜேர்மன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மனில் டீசல் வாகனங்கள் செலுத்துவற்கு தடை விதிக்கப்பட்ட முதலவாது நகரம் இதுவேயாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.