இத்தாலியில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து…

இத்தாலியின் டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன்18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.