ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சாலியபுர விவசாய பீட மாணவர்களுக்கு பரவும் சின்னம்மை நோய் காரணமாக விவசாய பீடம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய பீடத்தின் சில மாணவர்களுக்கு சின்னம்மை நோய் தொற்றியுள்ளதுடன், ஏனைய மாணவர்களுக்கும் தொற்றாமல் இருப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
சாலியபுர விவசாய பீடத்தில் 350 பேர் வரையிலான மாணவர்கள் கல்வி பயில்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.