நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
மேற்கு, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் மேற்கு மற்றும் தென் கடற்கரை பகுதியில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.