எதிர்வரும் இரண்டு தினங்களில் கடும் காற்று…

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையுமான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தைக் கொண்டதாக வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அவ்வாறான சந்தப்பத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது காற்றின் வேகம் உடனடியாக 70 க்கும், 80 க்கும் இடைபட்ட கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.

கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் கடற்றொழிலாளர்கள் மற்றும், கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் இரண்டு தினங்களில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடுமென்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.