கொச்சின் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் விபத்து…

கொழும்பில் இருந்து இந்தியாவின் கொச்சின் நோக்கிப் புறப்பட்ட யூஎல் 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் ஒன்று நேற்றைய தினம்(27) விபத்திற்குள்ளாகியுள்ளது

கொச்சின் விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கும் போது இவ் விபத்து ஏறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கிய போது, கொச்சின் விமான நிலைய தளத்தினை அண்மித்த பகுதியில் நிலவிய காலநிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில், 227 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் விபத்தின் போது ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.