ஓமன், எமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் எமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. எமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கடும்மழை பெய்துள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.