சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன்
மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(28) நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 45,680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 174,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட 17,976 குடும்பங்களை சேர்ந்த 70,376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.