நாட்டின் பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை…

நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் பதுளை, தெல்தெனிய, நாவுல, தம்புள்ளை மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது..