புகையிரத தாமதம் காரணமாக மேலதிக பேரூந்துகள் சேவையில்…

புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு, நேற்று(29) மாலை முதல் முன்னெடுத்துவரும் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக புகையிரதங்கள் பல தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், புகையிரத பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு மேலதிக இ.போ.ச பேரூந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.