அழிவடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உதவி…

கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

குறித்த இந்தப் பணிகள் இன்று(30) முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.