ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று(30) மாலை 05.00 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் என்பன குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.