மைத்திரி ஜனாதிபதியாவார் என தெரிவித்த முதல் சோதிடர், நாத்தாண்டியே பீ.பி. பெரேரா தற்கொலை… (Photos)

மைத்திரி ஜனாதிபதியாவார் என தெரிவித்த முதல் சோதிடர், நாத்தாண்டியே பீ.பி. பெரேரா தற்கொலை… (Photos)

இலங்கையின் பிரபலமான அரசியல்வாதிகளின் ஆஸ்தான சோதிடராக இருந்த இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டியே பீ.பி. பெரேரா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் (28) இவர் கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாதைக்கு அருகில் அமர்ந்திருந்த சோதிடர் கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சோதிடர் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனதிபதியாவர் எனக் கூறிய முதல் ஜோதிடர் இவராகும்.

அவ்வாறே, 2015ம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றத்திற்கு தேர்வாவார். அவருக்கு பிரதமராகும் வாய்ப்புக் கிடைக்காது எனவும் ஆரூடம் தெரிவித்திருந்தார். மேலும், 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைவார் என்றும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவரை சிறையில் அடைத்தொரே மீண்டும் விடுவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

பொன்சேகா இழந்த அனைத்து வரப்பிரசாதங்களும் 2015 ஏப்ரல் மாதமளவில் திரும்பக் கிடைக்கும் என்றும், 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பிற்பாடு, ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சில கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியினை முன்னெடுத்து செல்லும் எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.