48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் தொடரும் வாய்ப்பு…

புகையிரத திணைக்களம் சார்ந்த பணியாளர்களது சுமார் 40 தொழிற்சங்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக, இன்று(30) பல புகையிரத சேவைகள் தாமதித்துள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

12.1% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து தொழில் நுட்பவியலாளர்கள் நேற்று(29) மாலை 4 மணிமுதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், தாமதமாகவேணும் புகையிரதங்களை இயக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோருக்கு அச்சுறுத்தல் விடுப்பின், 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு தொடரும் என குறித்த சங்கங்கள் மேலும் எச்சரித்துள்ளது.