அமித் வீரசிங்கவுக்காக வெலிக்கட சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்…

அண்மையில் கண்டி – திகன வன்முறையில் சதித்திட்டம் தீட்டியமை குறித்து கைதாகிய மஹ சொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை கடந்த (26)ம் திகதி அனுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலையின், மருந்தகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறை கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு குழு இன்று(30) மதியம் 12.00 மணியளவில் வெலிக்கட சிறைச்சாலை தலைமையக முன்னாக கூட்டி அமைதிப் போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளது.