தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் தொற்றை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார்.