இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இன்று(31) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஜூன் 14ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவுக்கு அமைய விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று(30) குறித்த இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.