இன்று இரவு 7 மணி முதல் நீர் விநியோகத் தடை…

களனி தெற்கு நீர் சேமிப்பகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(01) இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார பிரிவுகள் மற்றும் பேலியகொடை, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரிவுகளிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.