நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை சிறிது அதிகரிக்கக்கூடும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.