மலையகத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக இன்று (03) அதிகாலை 2 மணி அளவில் கினிகதேன – நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் லோனக் கல்குவாரி பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்த விழுந்ததில் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேனையில் இருந்து நோட்டன் பிரீஜ் பகுதிக்கு செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு நோட்டன் பிரீஜ் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரியுள்ளனர்.
இதேவேளை மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.