ஒன்னரை மாத காலத்திற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகிகள் குழு அண்மையில் நியமிக்கப்பட்டதினை அடுத்து, மத்திய செயற்குழுவின் கன்னியமர்வு எதிர்வரும் 07ம் திகதி மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் இந்நாள் அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.