2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, 2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதுடன், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் போத்தல்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்வதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
மேலும், துணிப்பைகளையும், பிளாஸ்டிக் அல்லாத பொருட்களையும் உபயோகிக்க பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.