10 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளை சந்திக்கிறது…

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று(06) டிரினிட்டியில் உள்ள குவின்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி இதுவரை மேற்கிந்திய தீவுகள் நாட்டில் டெஸ்ட் தொடர் ஒன்றை கூட கைப்பற்றியது இல்லை.

இதனால் இலங்கை அணிக்கு கிரிக்கெட் வரலாற்றில் சாதனை ஒன்றை நிலை நாட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இறுதியாக 2008 ஆம் ஆண்டே மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. அதன்படி, இன்றைய போட்டி இலங்கை அணி, மேற்கிந்தி தீவுகள் நாட்டில் பங்குபற்றும் 8 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத்தை தவிர தற்போதைய இலங்கை அணியின் குழாமில் வேறு எந்தவொரு வீரரும் விளையாடியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.