ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) மாலை, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இன்று மத்திய செயற்குழு கூடவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.