ஏமன் கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 100க்கு மேற்பட்ட அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கியுள்ளதாகவும் மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.