இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…

தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

பஸ்யால முருதவெல வளைவு பிரதேசத்தில், இன்று(07) காலை மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்தொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அருகில் உள்ள விற்பனை நிலையமொன்றும் சேதமடைந்துள்ள நிலையில் , நிட்டம்புவ பொலிசார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.