சிலந்தி, ரணதந்த்ரா ஆகிய படங்களுக்குப் பிறகு ஆதிராஜன் இயக்கியுள்ள படம், அருவாசண்ட.
கபடி விளையாட்டையும், கவுரவக் கொலைகளையும் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்காக, தரண் இசையில் வைரமுத்து எழுதிய ‘சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ. தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ’ என்ற பாடலை ரம்யா நம்பீசன், பாலாஜி ஸ்ரீ இணைந்து பாடியுள்ளனர்.
புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நடித்துள்ளனர். விரைவில் படம் ரிலீசாகிறது.