கௌதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கௌதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதிலிருந்து எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பற்றவியுள்ளன.
ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கௌதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 99 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மீட்பு பணியின்போது மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் கௌதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.