கண்டி, மடவளை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாளக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (09) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் மனுஷ் மற்றும் அங்கொட லொக்கா எனும் பாதாளக்குழு தலைவர்களின் உதவியாளர்களாக செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று(09) இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.