பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் கைது…

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6012 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.